சோழவந்தான் அருகே கோயிலில் ஐம்பொன் சிலை நகை, கீரிடம் கொள்ளை!
மண்ணாடிமங்கலம்: சோழவந்தான் அருகே மண்ணாடிமங்கலம் தனியார் கோயிலில் அம்மன் ஐம்பொன்சிலை,11 பவுன் நகை, வெள்ளிகீரிடம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இங்கு நூற்றாண்டிற்கு மேல் பழமைவாய்ந்த மகாசக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. கிராம தெய்வமாக மக்கள் வழிப்படடுகின்றனர். பூசாரி மணி நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்க வந்தபோது அதிர்ச்சியுற்றார். இரும்பு கம்பி கதவு வளைக்கப்பட்டு, மூலவர் அம்மன் சன்னதி மரக்கதவு, பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்தது. மாவட்ட எஸ்.பி., பாலகிருஷ்ணன், சமயநல்லூர் டி.எஸ்.பி., காந்தசொரூபன், இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் விசாரித்தனர். 35 கிலோ எடையுள்ள அம்மன் ஐம்பொன் சிலை, ஒரு கிலோ வெள்ளி கீரிடம், பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 11 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை செய்கின்றனர்.