உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் பாதுகாப்பு அதிகரிப்பு!

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் பாதுகாப்பு அதிகரிப்பு!

https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_26330_130232196.jpgஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் பாதுகாப்பு அதிகரிப்பு!ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோயில் ராஜகோபுரத்தை தகர்க்க போவதாக மிரட்டல் வந்ததையடுத்து பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆண்டாள் கோயிலுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருவதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்த மிரட்டல் கடிதத்தில் ஜனவரி 1ம் தேதி தமிழக அரசின் முத்திரை சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரத்தையும், ஸ்ரீவி., இந்து முன்னணி தலைவர்களையும் அல்லாவிடம் அனுப்புவோம் என இருந்தது. சிவகாசி பள்ளி வாசல் தெருவை சேர்ந்த முகமது சித்திக் அனுப்பியதாக கடிதம் இருந்தது.இதை போலீசார் விசாரித்ததில் முகவரி போலியானது என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்து முன்னணியில் நிர்வாகிகள் வீடுகளையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ஆண்டாள் கோயிலில் ஏற்கனவே சிறப்பு அதிரடிப்படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு, சட்டம் ஒழுங்கு பிரிவு என 29 பேர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். நேற்று காலை முதல் சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் கூடுதலாக 10 போலீசார் ஆண்டாள் கோயில், ராஜகோபுரம் பகுதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் 39 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !