மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடைதிறப்பு!
ADDED :4341 days ago
சபரிமலை: சபரிமலையில், மகர விளக்கு பூஜைக்காக, இன்று, நடை திறக்கப்பட்டது. இன்று மாலை, 5:30 மணியளவில், தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில், மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி நடை திறந்தார்.சிறப்பு பூஜைகள், நடைபெறவில்லை. நெய் அபிஷேகம், நாளை (டிசம்பர் 31) காலை முதல், துவங்கும். பக்தர்களின் வசதிக்காக, சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.வரும், 12ம் தேதி, பந்தளத்திலிருந்து, திருவாபரணம் பவனி புறப்படுகிறது.14ல், மகரவிளக்கு பூஜை நடக்கிறது; 20ல், நடை அடைக்கப்படுகிறது.