உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்டு, தரிசன சேவை குறைபாட்டால் திருமலை பக்தர்கள்... அவதி!

லட்டு, தரிசன சேவை குறைபாட்டால் திருமலை பக்தர்கள்... அவதி!

திருப்பதி: திருமலையில், தேவஸ்தான தணிக்கை துறையின் அலட்சியத்தால், முறைகேடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால், லட்டு பிரசாதம் கிடைப்பதில் சிரமம், தரிசனம் மற்றும் தங்குமிட சேவை கிடைக்காமல், பக்தர்களின் அவதி, தொடர்கதையாகி விட்டது. இரண்டு பிரிவுகள்ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள, திருமலை வெங்கடாஜலபதி கோவில், திருமலை - திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தேவஸ்தானத்தின், வருவாயை கணக்கிட, இரண்டு தணிக்கை பிரிவுகள் உள்ளன. இவை, ஆந்திர மாநில தணிக்கைத் துறையின், மேற்பார்வையில் இயங்குகின்றன. பறக்கும் படையும், தணிக்கை குழுவில் இடம் பெற்றுள்ளது.திருமலையில், வழங்கப்படும் லட்டு டோக்கன்கள், அளிக்கப்படும் லட்டுகளின் விவரங்கள், வாடகை அறைகள், தரிசன டிக்கெட்டுகள், ஆர்ஜித சேவைகள், லட்டுக்கள் மூலம் வரும் வருமானம் முதற்கொண்டு, அன்றைய தினத்தின் கணக்குகளை, அன்றே சரி பார்க்க, இந்த தணிக்கை பிரிவுகளை, தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது.

முறைகேடு: இதற்காக, மாதம், 80 ஆயிரம் ரூபாய் வரை செலவிடப்படுகிறது. ஆனால், இதில் பணிபுரியும் ஊழியர்கள், இடைத்தரகர்களோடு கைகோர்த்து, முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். சில மாதங்களுக்கு முன், விரைவு தரிசன டிக்கெட்டை, நகல் எடுத்து பக்தர்களுக்கு அளித்தது, அதிகாரிகளுக்கு தெரிய வரவில்லை. இது நடந்து, ஆறு மாதங்களுக்குள், இம்மாதம், 24ம் தேதி, தர்ம தரிசன பக்தர்களின், லட்டு டோக்கன்களை நகல் எடுத்து, முறைகேடாக விற்பனை செய்தது தெரிய வந்தது.

ரூ.60 லட்சம்:
ஆனால், முறைகேடுகள் நடைபெறுவதை, யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. தினசரி கணக்கெடுப்பு சரியாக நடத்தப்பட்டால், முறைகேடுகளை தவிர்க்க, வாய்ப்பு அதிகம். ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால், 60 லட்சம் ரூபாய் வரை, லட்டு டிக்கெட் மூலம், முறைகேடு நடந்துள்ளதாக, அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !