நாளை "ஹரே ராம கூட்டு பிரார்த்தனை!
ADDED :4342 days ago
தேனி: தேனி அருகே உள்ள லட்சுமிபுரத்தில், நாளை(ஜன.,1ல்) ஹரே ராம, கூட்டு பிரார்த்தனை முரளீதர சுவாமி முன்னிலையில் நடக்கிறது. உலக அமைதி வேண்டியும், எல்லாவிதமான நன்மைகள் ஏற்படவும் "ஹரே ராம மஹாமந்திரந்தின் வைபவத்தை நிலை நிறுத்தவும், மஹாமந்திர நாமகீர்த்தன கூட்டு பிரார்த்தனை, நாளை (ஜன.1) புத்தாண்டு அன்று தேனி அருகே உள்ள லெட்சுமிபுரம், ஸ்ரீ ரேணுகா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. ஜன.1, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை, மஹாரண்யம் முரளீதர ஸ்வாமிஜி முன்னிலையில், "ஹரே ராம ஹரே ராம மஹாமந்திர நாம கீர்த்தன கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. அனைவரும் வரும் வருகை தந்து, கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்கலாம். அனுமதி இலவசம். மேலும் விவரங்களுக்கு: 92454 39344, 92455 06000.