உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரதோஷ சிறப்பு வழிபாடு

பிரதோஷ சிறப்பு வழிபாடு

விழுப்புரம்: விழுப்புரம் ஆதிவாலிஸ்வரர் கோவிலில் சோமவார பிரதோஷ விழா நடந்தது. விழுப்புரம் பூந்தோட்டம், ஆதிவாலிஸ்வரர் கோவிலில் நேற்று சோமவார பிரதோஷ வழிபாடு நடந்தது. நேற்று காலை ஆதிவாலிஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் பால், தயிர், நெய் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நந்திக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !