கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜைகள்
ADDED :4443 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடந்தன. கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதேஸ்வரர், தென்கீரனூர் மற்றும் முடியனூரில் உள்ள அருணாசலேஸ்வரர், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர் ஆகிய சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் செய்தனர். நந்தியம்பெருமானுக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடத்தி வைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.