திருத்தணி திருப்புகழ் திருப்படி திருவிழா!
ADDED :4342 days ago
திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் நேற்று நடைபெற்ற திருப்புகழ் திருப்படி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். திருத்தணி கோயிலில் ஆண்டுதோறும் திருப்புகழ் திருப்படி திருவிழா விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு நடைபெற்ற திருப்படி திருவிழாவில் அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம், தங்கவேல், பச்சை மரகதம், மாணிக்கக் கல், தங்க கிரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.