பக்த ஆஞ்சனேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி!
ADDED :4342 days ago
திட்டக்குடி: திட்டக்குடி பகுதியில் அனுமன்ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. திட்டக்குடி ஸ்ரீபக்த ஆஞ்சனேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன் னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, ஆஞ்சனேய சுவாமிகளுக்கு சிறப்பு அலங் காரம், வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. பூஜைகளை கோவில் கைங்கர்யம் பாலாஜிவரதாச்சாரி செய்து வைத்தார். காலை 6.30 மணி முதல் பக்தர்கள் வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதங்கள் வினியோகம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.