வதிட்டபுரம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி துவக்கம்!
திட்டக்குடி: வதிட்டபுரம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவம் துவங்கியது. தமிழகத்திலுள்ள வைணவ தலங்களில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து முதல் திருநாள் துவங்கியது. வதிட்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத அரங்கநாதபெருமாள் பகல் பத்து வைகுண்ட ஏகாதசி, ராப்பத்து திருவிழா, நம்மாழ்வார் மோட்சம் ஜனவரி 1 ம் தேதி முதல் நம்மாழ்வார் கோவில் உள்பிரகாச உற்சவமும் நடக்கிறது. ஜனவரி 11 ம் தேதி முதல் அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழாவும், சொர்க்க வாசலில் நம்மாழ்வார், மற்றும் ஆழ்வார்களுக்கு சதாதி மரியாதை, திருவாய்மொழி பாசுரம் துவக்கம் அன்று இரவு முதல் ராப்பத்து திருவிழாவும், 20 ம்தேதி முதல் காலை 9 மணிக்கு நம்மாழ்வார் சிறப்பு அபிஷேகமும், தீர்த்தவாரி உற்சவமும், இரவு 7 மணிக்கு நம்மாழ்வார் மோட்சம் வேத மந்திரமும் நடக்கிறது. விழாவினை சுதர்சன யக்ஞ சிம்மம் வரதசிங்காச்சாரி மற்றும் கோவில் பட்டாச்சாரியார்கள் நடத்துகின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன் மற்றும் அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.