பழநியில் சுவாமி தரிசனத்திற்கு 5 மணி நேரம் காத்திருப்பு!
ADDED :4341 days ago
பழநி: ஆங்கில புத்தாண்டையொட்டி, பழநியில் பக்தர்கள், ஐந்து மணி நேரம் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். பழநியில் தைப்பூச பாதயாத்திரை, சபரிமலை பக்தர்கள் வருகை காரணமாக, பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே, பக்தர்கள் குவிந்தனர். "வின்ச் ஸ்டேஷனில் மூன்று மணிநேரம் காத்திருந்து, பக்தர்கள் மலைக்கோவில் சென்றனர். மலைக்கோவிலில் பொது மற்றும் வி.ஐ.பி., கட்டண வழி உட்பட, அனைத்து தரிசன வழிகளிலும், பக்தர்கள் நீண்ட வரிசையில், ஐந்து மணி நேரம் காத்திருந்து, மூலவர் தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.