உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி கோவில் முன்பக்தர்கள் ஆர்ப்பாட்டம்!

திருப்பதி கோவில் முன்பக்தர்கள் ஆர்ப்பாட்டம்!

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவில் முன், பக்தர்கள், புத்தாண்டு நள்ளிரவின் போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருமலையில், வழக்கமாக, புத்தாண்டு மணித்துளிகள் நெருங்கும் போது, ஏழுமலையான் கோவில் முன் வரை, பக்தர்களை அனுமதிப்பர். ஆனால், நேற்று முன்தினம் நள்ளிரவு, கோவிலுக்கு அருகில் உள்ள, நாதநீராஜன மண்டபம் வரை மட்டுமே, பக்தர்களை அனுமதித்ததால், அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதியில், வி.ஐ.பி.,கள் வருகைக்காக, சிவப்பு கம்பளங்கள் விரிக்கப்பட்டன.சாதாரண பக்தர்களுக்கு, புத்தாண்டு அன்று, ஏழுமலையானை காண தடை விதித்தது, மட்டுமல்லாமல் கோவில் முன் வரை சென்று வழிபடக் கூட அதிகாரிகள் விடவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !