பூரியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம்!
ADDED :4341 days ago
பூரி: ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜகந்நாதர் கோவிலில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 5லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஒடிசா மாநில கவர்னர் எஸ்.சி ., ஜாமிர் , மாநில முதல்வர் நவீன்பட்நாயக் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஆகியோரும் ஜெகந்நாதரை தரி்சனம் செய்தனர். கோவிலில் உள்நாட்டு பயணிகள் மட்டுமல்லாது வெளிநாட்டு பயணிகளும் காத்திருந்து சாமி தரினம் செய்தனர். கோவிலில் இருந்து சுமார் ஒரு கி,மீ., தூரம் வரையில் வரிசையில் காத்திருந்து மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.