உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவாலயங்களில் புத்தாண்டு ஆராதனை

தேவாலயங்களில் புத்தாண்டு ஆராதனை

குறிச்சி: புத்தாண்டை முன்னிட்டு போத்தனூர் மற்றும் சுற்றுப்பகுதிகளிலுள்ள சர்ச்களில், நள்ளிரவு ஆராதனை நடந்தது. போத்தனூர், வெள்ளலூர் ரோடு சி.எஸ்.ஐ., ஐக்கிய ஆலயத்தில், நேற்று முன்தினம் காலை 6.00 முதல் மாலை 6.00 மணி வரை, சங்கிலித்தொடர் ஜெபம் நடந்தது. இரவு 11.30 மணிக்கு, புத்தாண்டு விழிப்பு ஆராதனை துவங்கி, 2.00 மணிக்கு, திருவிருந்துடன் முடிவடைந்தது. ஆயர் சாமுவேல் ஜான்சன் ஆராதனை நடத்தினார். தொடர்ந்து, காலை 9.00 மணிக்கு நடந்த ஆராதனையில், திருமுழுக்கு மற்றும் திருவிருந்து வழங்கப்பட்டது. இதையடுத்து, சபை மக்கள் ஆயரை சந்தித்து, புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மாலை 6.30 மணிக்கு, குடும்ப பாடல் ஆராதனை நடந்தது. மதுக்கரை மார்க்கெட் ரோடு, செட்டியார் தோட்டத்திலுள்ள மிஸ்பா பிரார்த்தனை மையத்தில் நடந்த ஆராதனையை, ஆயர் பிரான்சிஸ் செல்வன் நடத்தினார். திருவிருந்து வழங்கப்பட்டது. போத்தனூர் கடை வீதி புனித சூசையப்பர் ஆலயத்தில், நள்ளிரவு ஆராதனையை பங்குத்தந்தை ஜோயி பிரான்சிஸ், உதவி பங்குத்தந்தை பிச்சைமுத்து மற்றும் அந்தோணி இருதயம் நடத்தினர். தொடர்ந்து, காலை 7.30 மற்றும் 9.30 மணிக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தன. சுந்தராபுரம் காந்தி நகரிலுள்ள மெதடிஸ்ட், அபிராமி நகரிலுள்ள சி.எஸ்.ஐ., மலுமிச்சம்பட்டி மற்றும் மதுக்கரையிலுள்ள சி.எஸ்.ஐ., ஆலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு ஆராதனை நடந்தது. ஆராதனைகளில், சபை மக்கள் திரளாக பங்கேற்றனர். நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு, புத்தாண்டு வாழ்த்துகளை கூறி, மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !