உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா ஆடு, கோழி பலியிட்டு நேர்த்தி கடன்

மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா ஆடு, கோழி பலியிட்டு நேர்த்தி கடன்

சென்னிமலை: சென்னிமலை அடுத்த தொட்டம்பட்டி ஸ்ரீமாகாளியம்மன் கோவில் பொங்கல் விழாவில், ஏராளமான பொதுமக்கள் பெ ாங்கல் வைத்து, நேர்த்தி கடனாக ஆடு, கோழி பலி கொடுத்தனர். சென்னிமலை யூனியன் பனியம்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட, தொட்டம்பட்டி ஸ்ரீமாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, 15 நாள் விமர்சையாக கொண்டாடப்படும். இந்தாண்டு பொங்கல் விழா, டிசம்பர், 18ம் தேதி, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 25ம் தேதி கும்பம் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மாகாளியம்மனுக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம், பகல் காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வர புறப்பட்டனர். நேற்று காலை தீர்த்தக்குடங்கள், சென்னிமலை வந்தடைந்தது. பிராட்டியம்மன் கோவிலில் இருந்து, வானவேடிக்கை உடன், மேளதாளம் முழங்க காலை, 7 மணிக்கு புறப்பட்டது. சென்னிமலை, நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்து, தொட்டம்பட்டி சென்று, மதியம் தீர்த்த அபிஷேகம் நடந்தது. இரவில், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது இன்று, அதிகாலை குதிரை துலக்குதல், அம்மை அழைத்தல் மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. காலை, 10 மணிக்கு ஸ்ரீமாகாளி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகமும் சிறப்பு பூஜையும் நடக்கிறது. பகல், 12 மணிக்கு கும்பம், நீர் துறை சேர்தலும், மாலை, 5 மணிக்கு, மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.நாளை இரவு, 8 மணிக்கு மறுபூஜையுடன், பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !