உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி கோவில்களில் புத்தாண்டு சிறப்பு பூஜை

கிருஷ்ணகிரி கோவில்களில் புத்தாண்டு சிறப்பு பூஜை

கிருஷ்ணகிரி: புத்தாண்டை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி நகரில், சென்னை சாலை பெரியமாரியம்மன் கோவில், சப்-ஜெயில் ரோடு, சித்தி விநாயகர் கோவில், அம்மன் நகர் விநாயகர் கோவில், பழையபேட்டை கண்ணிகா பரமேஸ்வரி கோவில் மற்றும் அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் ஆகிய இடங்களில், அதிகாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனையொட்டி, கோவில்களில், காலை முதலே, நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், கிருஷ்ணகிரி நகரில் உள்ள சர்ச்சுகளிலும், நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறப்பு பிராத்தனைகள் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம், இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நகரில், அசம்பாவித சம்பங்கள் நடைபெறாமல் இருக்க, கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டு, ரோந்துப்பணி மேற்கொண்டனர்.
* கிருஷ்ணகிரி அடுத்த தேவசமுத்திரம் காட்டுவீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அனுமந்த் ஜெயந்தி மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டது. இதனையடுத்து, ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை வழிபட்டனர். நேற்று மாலை, 6 மணிக்கு கோவிலில், புதியதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேர் பிரகார உற்சவம் நடந்தது.
இதேபோல், அனுமந்த் ஜெயந்தியை முன்னிட்டு, கரகூர் வீர ஆஞ்சநேயர் கோவில், பாப்பன்பாறை மேல் முக ஆஞ்சநேயர் கோவில், சப்பாணிப்பட்டி குபரே ஆஞ்ச நேயர் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில், காவேரிப்பட்டணம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !