உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழ்ந்தால் உங்களைப் போல் வாழ வேண்டும்!

வாழ்ந்தால் உங்களைப் போல் வாழ வேண்டும்!

*மகிழ்ச்சி என்பது செல்வச்செழிப்பால் மட்டுமே கிடைப்பதுஇல்லை. மாடமாளிகையில் வாழும் பணக்காரருக்கும் கவலை இருக்கலாம்.குடிசையில் வாழ்ந்தாலும் ஏழையின் முகத்தில் மகிழ்ச்சி குடியிருக்கலாம்.
*நல்லகுணத்துடன் வாழ்வதில் தான் மனிதனின் பெருமை அடங்கியிருக்கிறது. குணம் இல்லாதவனிடம் எத்தனைதிறமைகள் இருந்தும்பயனில்லை.
*உடம்பு வளைந்து நிமிர்ந்து செயல்பட்டால் தான்சுறுசுறுப்பும், அறிவுத்தெளிவும் உண்டாகும்.
*பிறரிடம் யாசகம் பெற்று, நெய்யும், பாலும் சேர்ந்த அன்னத்தை உண்பதை விட, உழைப்பினால் கிடைக்கும் தண்ணீரும் சோறும் மேலானது.
*புகழ் இல்லாமல் மங்கிய வாழ்க்கையை நீண்டகாலம் வாழ்வதைக் காட்டிலும்,புகழோடு சிறிதுகாலம் வாழ்வதே சிறந்தது. என்னைப் போல் சிறிது காலமாவது இந்த பூமியில் வாழ் என்று மற்றவர்களுக்கு வழிகாட்டும் வகையில் நமது வாழ்க்கை அமைய வேண்டும்.
*முதுமைக்கு வேண்டியதை இளமையில் தேட வேண்டும். மறுமைக்கு வேண்டியதை இந்த பிறவியிலேயே தேடிக் கொள்ள வேண்டும்.
*தர்மத்தில் செலவழிக்கும் பணமே நம்முடைய பணம். இறைவனின் திருநாமத்தை ஜெபித்த நேரமே நம்முடைய நேரம்.
*நம்மை நாமே திருத்திக் கொள்வது தான் உயர்ந்தது. உங்களை நீங்களே சோதித்துக் கொள்ளுங்கள்.தவறுகளை கண்டறிந்துதிருத்த முயலுங்கள்.
*ஆற்றிலே நாம்குளிக்காவிட்டால்ஆறு நம்மிடம்கோபிப்பதில்லை.குளித்தால் நமக்குநன்மை. இல்லாவிட்டால் நமக்குதான் துன்பம்.
*பலர் கூடிச்செய்யும்கூட்டுப் பிரார்த்தனைக்கு சக்திஅதிகம். அதனை கடவுள் உடனே ஏற்றுக் கொண்டு அருள்புரிவார்.
*நல்லவர்களுடையஉபதேசத்திற்கு செவி சாயுங்கள். அதுவே செவி வழியாக உண்ணும் உணவு.
*குற்றம் செய்த கைதிக்கும் அரசாங்கம் உணவிடுவது போல, கடவுள் மறுப்பு செய்பவர்களையும் கடவுள் காத்தருள்கிறார்.
*மற்றவர்கள் பொய்யைக் கூறினாலும்கூட, உண்மையை மட்டும் பேசுங்கள். தர்மவழியில் பிறழாமல் வாழ்க்கை நடத்துங்கள். தாய், தந்தையை தெய்வமாகப் போற்றுங்கள்.
*கடவுள் நமக்கு செய்வது அத்தனையும் அருள் தான். சில சமயம் வாழ்வில் ஏற்படும் சோதனைகள் துன்பம் போலத் தோன்றும். ஆனால், அதுவும் நன்மைக்கே.
*மண்ணில் பிறந்தஅனைவரும் மனிதனாகி விட முடியாது. நல்ல நெறிகளைப் பின்பற்றி தர்மவழியில் நடப்பவனே உண்மையான மனிதன்.
*தினமும் குடும்பத்திலுள்ள அனைவரும் ஒன்றுகூடி காலை அல்லது மாலையில் வழிபாடு செய்யவேண்டும்.
*பணம், பதவி, குலம், அழகு, உயரம் இவற்றால் மனிதன் உயர்வதில்லை. அறிவு ஒன்றுதான்மனிதனை அளப்பதற்கானஅளவுகோல்.
-வாரியார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !