வைகுண்ட ஏகாதசி திருவிழா: வைர கிரீடத்தில் வரதராஜ பெருமாள்!
ADDED :4338 days ago
சேலம்: பட்டைக்கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, நடந்து வரும் "பகல்பத்து உற்சவத்தின் 2ம் நாளான நேற்று வரதராஜர் வைர கிரீடம் அணிந்து சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.