உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவிலில்கருட பஞ்சமி விழா

பெருமாள் கோவிலில்கருட பஞ்சமி விழா

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், மூன்றாம் ஆண்டு கருட பஞ்சமி விழா, ஜனவரி, 5ம் தேதி, நடக்கிறது. மகாவிஷ்ணு, மகாலட்சுமி, கருடாழ்வார், ரங்கநாதர், ஆண்டாள், பிரம்மா, சிவன், நாரதர், கிளிரூபர் ஆகிய ஸ்வாமிகளுக்கு, 3,108 மகா சகஸ்ரதீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்படும்.காலை, 9 மணிக்கு, லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் கருடாழ்வாருக்கு அபிஷேகம், மதியம், 1 மணிக்கு, தீபாராதனை, மாலை, 6 மணிக்கு, 3,108 மகா சகஸ்ரதீபம், இரவு, 7 மணிக்கு, கருடாழ்வார் மகிமை குறித்த சொற்பொழிவு நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, விழாக் குழுவினர், செயல் அலுவலர் முத்துசாமி, தக்கார் சபர்மதி ஆகியோர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !