உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி தைப்பூசத்திற்கு உள்ளூர் விடுமுறை!

பழநி தைப்பூசத்திற்கு உள்ளூர் விடுமுறை!

திண்டுக்கல்: பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு, ஜன.,17 ல் திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூச விழா ஜன.,11 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருக்கல்யாணம், வெள்ளிரதம், தேரோட்டம், தெப்ப உற்சவத்துடன் ஜன., 20 ல் முடிகிறது. ஜன.,17 ல் நடைபெறும் தைப்பூச தேரோட்டத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் வெங்கடாசலம் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு ஜன.,17 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், அன்றைய தினம் கருவூலங்கள், அவசரகால தேவையுள்ள அலுவலகங்கள் மட்டும் செயல்படும். இந்த விடுமுறையை ஈடும் செய்யும் வகையில், ஜன.,25 வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !