உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அப்பாவின் பெயரை மாற்றிய அம்பாள்!

அப்பாவின் பெயரை மாற்றிய அம்பாள்!

தாட்சாயணி என்ற பெயர் பார்வதிதேவிக்கு உண்டு. தட்சன் என்பவனுக்கு அவள் மகளாகப் பிறக்க நேர்ந்தது. அவன் அவளை சிவபெருமானுக்கு மணம் முடித்து வைத்தான். மருமகனுக்கு மதிப்புஅளிப்பது உலக இயல்பு. ஆனால், இந்த தட்ச மாமானாரோ, மருமகன் தனக்கு மதிப்பளிக்க வேண்டுமென விரும்பினான். இதனால் அவனுக்கு பார்வதிதேவி சிவேதரன் என்று பெயர் வைத்தாள். சிவனுக்கு இதரன் என்று இதைப் பிரிக்கலாம். சிவ என்றால் மங்களம். மங்களத்துக்கு இதரன் என்றால் மங்கள குணங்களுக்கு எதிரானவன் என்று தந்தைக்கே பெயர் சூட்ட வேண்டிய நிர்ப்ச்பந்தத்துக்கு ஆளானாள். தட்சன் என்ற பெயரை அடிப்படையாகக் கொண்டே அம்பாளுக்கு தாட்சாயணி என்ற பெயர் சூட்டப்பட்டது. தந்தையே தனக்கு எதிராகத் திரும்பியதால் தாட்சாயணி என்ற பெயர் தனக்கு தண்டனை தரப் பட்டது போல உணர்ந்தாள் அவள். எனவே, தன் தந்தைக்கு தட்சன் என்ற பெயரை மாற்றி, சிவேதரன் என்று பெயர் சூட்டிவிட்டாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !