சண்டிகேஸ்வர வழிபாடு ஏற்பட்டது எப்படி?
ADDED :4337 days ago
விசாரசருமன் ஒரு சிவபக்தர். சிவபூஜை செய்த போது, அவருடைய தந்தையே தடுக்க வந்தார். கட்டுக்கடங்காமல் கோபம் கொண்டு, தந்தையின் ஒரு காலையே துண்டித்து விட்டார். சிவபெருமான் விசாரசருமனின் வேகத்தைக் கண்டு, சண்டேசர் என்று பெயரிட்டு அழைத்தார். சண்ட என்பதற்கு மிகவேகமான என்று பொருள். சிவன் கோயில்களில் ஈசனுக்கு அருகிலேயே தியானம் செய்யும் பாக்கியத்தைப் பெற்றார். சிவன் சொத்துக்களை அபகரிப்பவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் பெற்றவர் இவர் தான். காலப்போக்கில் சண்டேசர் என்னும் சொல்லே சண்டிகேஸ்வரர் என்று மாறி விட்டது.