உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தை ஏசு ஆலய ஆண்டு திருவிழா

குழந்தை ஏசு ஆலய ஆண்டு திருவிழா

ஊட்டி: ஊட்டி குழந்தை ஏசு ஆலத்தின் ஆண்டுவிழா நடந்தது. காலை 10:30 மணிக்கு, ஊட்டி மறை மாவட்ட பிஷப் அமல்ராஜ் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. பங்கு குருக்கள் ஸ்தனிஸ், இருதய லாரன்ஸ், ஆல்வின், நோயல் பங்கேற்றனர். முன்னதாக, ஜோசப் கல்வியியல் கல்லூரி குழுவினரின் பாண்டு வாத்திய இசை நடந்தது. மதியம் 3:00 மணிக்கு, குரு ஜான்மயல் தலைமையில், மலையாள திருப்பலி நடந்தது. மாலை 5:00 மணிக்கு, மாநில கத்தோலிக்க கல்வி கமிஷன் தலைவர் சவுந்தர்ராஜ் தலைமையில் திருப்பலியும், தொடர்ந்து, அலங்கரிக்கப் பட்ட சப்பரத்தில் குழந்தை ஏசு பவனி வந்தார். பின், நற்கருணை ஆசிருடன் விழா நிறைவு பெற்றது. அன்பிய தலைவர் ரபஸ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !