பெதஸ்தா மையத்தில் ஆசீர்வாத கூட்டம்
ADDED :4333 days ago
பேரூர்: காருண்யா பெதஸ்தா மையத்தில், சிறப்பு ஆசீர்வாத பிரார்த்தனைக்கூட்டம் நடந்தது. ஆலாந்துறை அருகே காருண்யா நகரில் பெதஸ்தா சர்வதேச பிரார்த்தனை மையம் உள்ளது. இங்குள்ள கலையரங்கத்தில், காருண்யா பல்கலை வேந்தர் பால்தினகரன் தலைமையில், புத்தாண்டு சிறப்பு ஆசீர்வாத பிரார்த்தனை கூட்டம் நடந்தது. மேலும், காருண்யா பல்கலை மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சியும் நடந்தது. இக்கூட்டத்தில், காருண்யா பல்கலை மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.