உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை குழுவினரின் 19ம் ஆண்டு தீமிதி விழா

சபரிமலை குழுவினரின் 19ம் ஆண்டு தீமிதி விழா

மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் தாலுகா சா.அய்யம்பாளையத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஆண்டுதோறும் மாலையணிந்து விரதமிருந்து சபரிமலை செல்கின்றனர். சபரிமலைக்குச் செல்லும் முன் மாலை அணிந்தவர்களுக்கு இருமுடி கட்டி தங்கள் குலதெய்வ கோவில்களுக்கும், கிராமத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கும் சென்று வழிபட்டனர்.அதன் பின்னர் நேற்று முன்தினம் மாலை 4.15 மணியளவில் ஊர்வலமாக வந்து சா.அய்யம்பாளையம் கீழூரில் உள்ள மாரியம்மன் கோவில் முன் குருசாமி தர்மலிங்கம் தலைமையில் 60 பக்தர்கள் தீக்குழியில் இறங்கி தீ மிதித்தனர். அதன் பின்னர் அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !