உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் திருவிழா: கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பெண்கள் வழிபாடு!

மாரியம்மன் திருவிழா: கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பெண்கள் வழிபாடு!

ஈரோடு: நாராயணவலசு மாரியம்மன் கோவிலின் பொங்கல் விழாவுக்காக கடந்த மாதம் 31ம் தேதி பூச்சாட்டப்பட்டது. பின்னர் கோவிலின் முன்பு கம்பம் நடப்பட்டது. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் தினமும் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். 2–ந் தேதி பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.நேற்று மாலை 4 மணிக்கு வைராபாளையம் காவிரி ஆற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து கோவிலுக்கு வந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !