திருமலையில் ஆழ்வார் திருமஞ்சனம்
ADDED :4328 days ago
திருமலையில் செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. ஜனவரி மாதம் 11-ம் தேதி சனிக்கிழமை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதற்கு முன் வந்த செவ்வாய்க்கிழமைய கோயிலை தூய்மை செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதற்காக மஞ்சள், சந்தனம், புனுகு, கோரோஜனம், குங்குமம், பச்சை கற்பூரம் முதலிய கிருமிநாசினிகளால் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. இதையொட்டி, பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் 11 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்பட்டது.