சிவன்மலை தைப்பூசத் தேர்: பக்தர்கள் கோரிக்கை!
ADDED :4329 days ago
சிவன்மலை: தைப்பூசத் தேருக்கு பயன்படுத்தப்படும் குடில் கட்டைகளை தரமாக தயார் செய்யுமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோயிலில் தைப்பூச தேர் திருவிழாவிற்கு தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து தேர் வடம் பிடித்து, சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த தேர் மிகப்பெரியது. தேரின் வேகத்தை குறைக்க குடில் கட்டைகளை தேரின் சக்கரத்தில் வைத்து அதன் வேகத்தை குறைத்து, தேர் சீராக செல்ல வைக்கப்படும். தேரி மலையை வலம் வர குடில் கட்டைகள் பங்கு முக்கியமானது. இந்த கட்டைகள் மிக தரம் குறைவாக தயார் செய்யபட்டு வருவதாக பக்தர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். சிவன்மலை தேருக்கு பலவீனமான குடில் கட்டைகளை தயாரிப்பதை நிறுத்திவிட்டு, நல்ல மரத்தில் கட்டைகளை தயாரிக்க வேண்டும், என்பதே இப்பகுதி பக்தர்களின் கோரிக்கை.