மாதேஸ்வரா சுவாமி கோவிலில் குண்டம் விழா
ADDED :4329 days ago
தாளவாடி: ஒசூர், மகா மாதேஸ்வரா சுவாமி கோவில் குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி, திங்கள்கிழமை இரவு பால்குடம் எடுத்தல், குறவர் நடனம், புலியாட்டம் மற்றும் வாண வேடிக்கைகளுடன் சப்பர ஊர்வலம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.