உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தைப்பூச பாதயாத்திரை பக்தர்களுக்கு மருத்துவ உதவி தேவை

தைப்பூச பாதயாத்திரை பக்தர்களுக்கு மருத்துவ உதவி தேவை

கன்னிவாடி: தைப்பூசத்தை முன்னிட்டு மெட்டூர், திண்டுக்கல்லில் இருந்து மூலச்சத்திரம் செல்லும் ரோட்டில், பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பங்குனி உத்திரம் வரை, கணிசமான அளவில் பக்தர்களின் வருகை இருக்கும். சுகாதாரத்துறை சார்பில், பாலம்ராஜக்காபட்டி, செம்மடைப்பட்டி, மூலச்சத்திரம், தருமத்துப்பட்டி, கன்னிவாடி, ஸ்ரீராமபுரம் ஆகிய இடங்களில், சிறப்பு மருத்துவ உதவி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்தாண்டு நடந்த முகாம்களில், போதிய அடிப்படை வசதிகள் இல்லை. பெரும்பாலான நேரங்களில், முறையாக பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் இல்லை. தன்னார்வ, நர்சிங் மாணவியர், பணியில் நியமிக்கப்பட்டனர். உடல்நலக் குறைவுடன் வரும் பக்தருக்கு, ஏற்கனவே சர்க்கரை, ரத்தக்கொதிப்பு இருக்கும் பட்சத்தில், சில மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இரவு நேரங்களில், பக்தர்களுக்கு மருத்துவ வசதி கிடைப்பதில் சிரமத்திற்கு வாய்ப்புள்ளது. மின்சாரம் உள்ளிட்ட ஏற்பாடுகளுக்கு, உள்ளாட்சி நிர்வாகங்களைப் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். குறைந்தபட்சம், ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில், 24 மணிநேர முதலுதவிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். முகாம் பந்தலில் 24 மணிநேர டாக்டர், செவிலியர், மின்வசதி, தயார் நிலையில் நடமாடும் மருத்துவ குழுவிற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !