யதோக்தகாரி கோவிலில் பகல் பத்து உற்சவம்
ADDED :4330 days ago
காஞ்சிபுரம்: யதோக்தகாரி (சொன்ன வன்னம் செய்த பெருமாள்) கோவிலில், பகல் பத்து உற்சவம் நடந்து வருகிறது. காஞ்சிபுரம் யதோக்தகாரி கோவிலில், மார்கழி மாதத்தில், பகல் பத்து, இராப் பத்து என, இருபது நாட்கள் உற்சவம் நடக்கும். மார்கழி அமாவாசைக்கு அடுத்த பிரதமை நாளில், பகல் பத்து உற்சவம் துவங்குகிறது. அதே போல், வைகுண்ட ஏகாதசி முதல், பஞ்சமி வரை, இராப் பத்து உற்சவம் நடக்கிறது. இந்த இருபது நாட்களில், பன்னிரெண்டு ஆழ்வார்கள், உற்சவ மூர்த்திகளை ஒரே இடத்தில் எழுந்தருளச் செய்து, நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடி வருகின்றனர்.