ஊட்டி கிருத்திகை பூஜை
ADDED :4307 days ago
ஊட்டி: ஊட்டி காந்தல் தட்சிணாமூர்த்தி மடாலய வளாகத்தில் வரும் 11ம் தேதி கிருத்திகை பூஜை நடக்கிறது. மதியம் 3:00 மணி முதல் கோவிலில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், தயிர், விபூதி, சந்தனம், மலர் வகைகள், பழ வகைகள் உட்பட 32 வகையான அபிஷேகங்கள் நடக்கிறது. மடாலயத்தின் 6வது குரு முதல்வர் மருதாசல அடிகளார் தலைமையில் காசி விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாதருக்கும், பிற தெய்வங்களுக்கும் பேரொளி வழிபாடு நடத்தப்படுகிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடக்கிறது.