கடம்பன்துறையில் 16ல் தைப்பூச விழா
ADDED :4374 days ago
குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பன்துறை காவிரியில் தைப்பூச திருவிழா வரும், 16ம் தேதி நடக்கிறது. இதையொட்டி கடம்பர்கோவில் கடம்பனேஸ்வரர், ராஜேந்திரம் மத்யாகணேஸ்வரர், அய்யர்மலை ரத்தினகிரிஸ்வரர், திருஈங்கோய்மலை மரகதனேஸ்வரர், கருப்பத்தூர் சிம்மபுரிஸ்வரர், பெட்டவாய்த்தலை மத்தியார்ஜீனேஸ்வரர் உட்பட எட்டு கோவில்களில் இருந்து வரும் ஸ்வாமிகள் சந்திப்பு மாலை, 4 மணி முதல் 5 மணி வரையும், அதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.