ரங்கநாதா கோஷம் முழங்க.. ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு!
திருச்சி: பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் இன்று அதி் காலை 4.30 மணியளவில் பரமபதவாசல் என்றழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் கோவிலில் பகல்பத்து ராப்பத்து விழா நடைபெற்று வந்தது. இந்நிலையி்ல் இந்த விழாவி்ன முத்தாய்பாக பரமபதவாசல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதிகாலை 3.15 மணியளவில் மூலஸ்தானத்தி்ல இருந்து புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து சந்தன மண்டபம் எழுந்தருளி ஜீயர்கள், ஸ்தலத்தர்களின் மரியாதைய ஏற்றுக்கொண்டு இரண்டாம் பிரகாரம் வந்தடைந்தார். தொடர்ந்து கொடி மரத்தை சுற்றிவந்து வேத விற்பண்ணம் கேட்டார். இதை தொடர்ந்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அப்போது பக்தர்களின் ரங்காநாதா ,ரங்கநாதா என கோஷத்துடன் ரத்தின அங்கி அணிந்து பரமபத வாசலை கடந்தார். விழாவில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், வனத்துறை அமைச்சர் ஆனந்த் எம்.பி.,குமார், மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ, இந்து அறநிலையத்துறை கமிஷனர் தனபால், இந்து அறநிலையத்துறை செயலாளர் கண்ணன், தலைமை அரசு தலைமை கொறாடா மனோகரன், பொள்ளாச்சி ஜெயராமன், அக்ரி்கிருஷ்ணமூர்த்தி மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.