உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவிலில் கருடசேவை!

காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவிலில் கருடசேவை!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சிறப்பு கருடசேவை நடைபெற்றது. காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே, வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, மாவட்டத்தின் வெறெந்த கோவில்களிலும் இல்லாத சிறப்பாக, வைகுண்ட ஏகாதேசி நாளில் கருடசேவை நடைபெறும். இந்நிலையில், வைகுண்ட ஏகாதேசியை  முன்னிட்டு காலை 7:00மணிக்கு, வைகுண்ட பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி, முக்கிய விதிகளில் வீதியுலா வந்தார். மேலும், கருடசேவை முன்னிட்டு கோவில் மற்றும் வழிநெடுகிலும் அன்பர்கள், நீர், மோர் மற்றும் அன்னதானம் உள்ளிட்டவைகளை பக்தர்களுக்கு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !