ஈரோடு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு!
ADDED :4317 days ago
ஈரோடு: ஈரோட்டில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கோட்டை பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜையும் நடந்தது. பின்னர் இரவு 10 மணிக்கு சுவாமி மோகினி அலாங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் புணரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறவில்லை. ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஆதிகேசபெருமாள் உடனமர் சவுந்திரவள்ளிதாயார் ஆகிய உற்சவர்களுக்கு பரமபத அலங்காரம் செய்யப்பட்டு, கோவிலின் முன் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் ஈரோடு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களிலும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.