உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருப்பு

பழநி பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருப்பு

பழநி: தைப்பூச திருவிழா, இறுதிகட்டத்தை நெருங்கி விட்டதால், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பாதயாத்திரை பக்தர்களும், சபரிமலைக்கு சென்று திரும்பும் பக்தர்களும், பழநிக்கு அதிகமாக வருகின்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் கிரிவீதிகள், யானைப்பாதை, படிப்பாதைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. வயதானவர்கள், குழந்தைகளுடன் வந்த வெளியூர் பக்தர்கள், ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் 2 மணிநேரம் காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்றனர். அங்கு, வெளிப்பிரகாரம் முழுவதும் குவிந்திருந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் 6 மணி நேரம் காத்திருந்து, மூலவர் தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !