கோயில் திறக்க கோரிக்கை
ADDED :4320 days ago
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா, ஜன.,16ல் நடக்கிறது. இதற்காக, அன்று அம்மனும், சுவாமியும் மாரியம்மன் தெப்பக்குளத்தில்எழுந்தருளுவர். அவர்கள் இரவு கோயிலுக்கு திரும்பும் வரை நடை மட்டும் சாத்தப்பட்டிருக்கும். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக சில ஆண்டுகளாக கோயில் பூட்டப்பட்டு வருவதாக இந்து ஆலய பாதுகாப்பு குழு குற்றம்சாட்டுகிறது. இதன் பொதுச்செயலாளர் சுந்தரவடிவேல் கூறுகையில், தெப்பத்திருவிழா அன்று கோயிலுக்கு வரும் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் வரும் பக்தர்கள், ஏமாற்றம் அடைவர். அவர்களின் பயணமும் பாதிக்கப்படும். இதை கருத்திற்கொண்டு, கோயில் வளாகத்தை மீண்டும் திறக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.