உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் குளிக்க முடியாமல் தைப்பூச பக்தர்கள் கடும் அவதி

பழநியில் குளிக்க முடியாமல் தைப்பூச பக்தர்கள் கடும் அவதி

பழநி கோயிலுக்கு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், குளிக்க தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு, இவ்வாண்டு பழநி வட்டாரத்தில் கடும் வறட்சி நிலவுதால், பக்தர்கள் நீராடும், வரட்டாறு, இடும்பன்குளம், சசண்முகநதி போன்ற இடங்களில் தண்ணீர் இல்லை.  தைப்பூசச விழாவை முன்னிட்டு, விரதமிருந்து, பாதயாத்திரையாக கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சிவகங்கை, திருநெல்வேலி உட்பட வெளி மாவட்டத்தைச் சேசர்ந்த பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். அவர்களின், வசசதிக்காக இடும்பன் குளத்தில், ஆழ்குழாய்கள் அமைத்து, பக்தர்கள் குளிப்பதற்கு தண்ணீர் வழங்க வேண்டும். தைப்பூசச விழா ஆலோசசனை கூட்டத்தில் கலெக்டர் வெங்கடாசசலம் தெரிவித்தார்.  ஆனால், இடும்பன்குளத்தின், அருகே அமைக்கப்பட்ட ஆழ்குழாயில் எதிர்பார்த்த அளவிற்கு தண்ணீர் கிடைக்காததால், பக்தர்கள் குளிப்பதற்காக அமைக்கப்பட்ட தொட்டியில், தண்ணீர் நிரப்ப முடியவில்லை. இதன் காரணமாக, இடும்பன் குளத்தில் குவிந்த ஆயிரக்காண பக்தர்கள், குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். நவீன கட்டண குளிக்குமிடங்களி<<லும் கூட்டம் அலைமோதியது, அவர்கள் குளிக்க ரூ.10 முதல் ரூ.20வரை வசூல் செசய்கின்றனர். இடும்பன்குளம் பகுதியில் பக்தர்கள் குளிக்க, ஆண்டிற்கு பலகோடி ரூபாய் வருமானம் உள்ள, பழநிகோயில் நிர்வாகம் ஏற்பாடு செசய்ய வேண்டும். இதற்கு தமிழக அரசு உத்திரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !