உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோயிலில் தேங்கும் குப்பை

பெருமாள் கோயிலில் தேங்கும் குப்பை

ஆண்டிபட்டி:ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் குப்பை தேங்குகிறது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் சித்திரை மாதம் பத்துநாள் விழா நடைபெறும். வாராந்திர சனிக்கிழமை, கார்த்திகை, புரட்டாசி, மார்கழி மாதங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருமணம், காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. அதிகப்படியான பக்தர்கள் வரும் நாட்களில், கோயில் முழுவதும் குப்பை சேர்ந்து விடுகிறது. அன்னதானம் வழங்கும் நாட்களில் ஆங்காங்கு சிந்திய உணவுப்பொருட்களால் கோயில் வளாகம் முழுவதும் குப்பையாக உள்ளது. இதனால் கோயிலில் பக்தர்கள் அமரும் இடம் அசுத்தமாகி விடுகிறது. கோயில் நுழைவுப் பகுதியில் பக்தர்கள் அமரும் இடத்தில் கடைகளை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அசுத்தமாகும் கோயில் பகுதியை அடிக்கடி சுத்தம் செய்யவும், கோயில் வராண்டாவில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தவும் அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !