உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகத்திய மாமுனிவர் ஞானம் – முப்பது: சித்த வித்யா விளக்கவுரை!

அகத்திய மாமுனிவர் ஞானம் – முப்பது: சித்த வித்யா விளக்கவுரை!

இக்கட்டுரை ஆசிரியர் குடும்ப வழி அகஸ்திய மகரிஷியை குலகுருவாக வழிபட்டு வருபவர்கள், தனது பதினாறு வயதில் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளிடம் காயத்ரி மந்திர தீட்சை பெற்று காயத்ரி உபாசனையும், அவரிடம் குருகுல முறைப்படி குரு சேவை புரிந்து சித்த யோகம், காயத்ரி குப்த விஞ்ஞானம், சித்தி மனிதன் பயிற்சி, இரகசிய  வித்யா, மானச யோகம் போன்ற பல்வேறு சித்தர்களது இரகசியங்களை நவீன விஞ்ஞான விளக்கங்களுடன் கற்றவர். ஸ்ரீ வித்தையில் விசாகப்பட்டினம், தேவிபுரம் ஸ்ரீ அமிர்தானந்த நாத சரஸ்வதி அவர்களிடம் பூர்ண தீட்சை பெற்ற தேவி உபாசகர்.

தனது குருநாதர்களின் வாக்குக்கமைய எமது ரிஷிகள் கண்ட வழியான உலகவாழ்க்கையில் இருந்து தனது கடமைகளை செய்து ஆத்ம யோக ஞான முன்னேற்றம் அடையும் வழியில் பயணித்த வண்ணம், “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற வாக்குக்கமைய தனது எழுத்துக்களின் மூலம் தனது குருவிடம் பெற்ற ஞானத்தினை தேடல் உள்ளவர்களுக்காக பகிர்ந்து வருகிறார்.

பகுதி 1

ஆதிகுரு அகத்திய மகரிஷி குருவின் பாதம் போற்றி!
குலகுருவாய் வித்தை அளித்திட்ட மௌனகுரு சித்தர் பாதம் போற்றி
மானச குருவாய் ஆத்ம யோக ஞான வித்தைகளின் சூட்சுமங்கள் புரிவித்த ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர தேவரின் பாதம் போற்றி!
சித்த நெறியில் தீட்சை அளித்திட்ட காயத்ரி சித்த முருகேசுகுருவின்  பாதம் போற்றி!

அகத்தியர் ஞானம் - முப்பது என்ற இந்த முப்பது பாடல்களும், இன்னும் பல அகத்தியர் அருளிய நூற்களும் பழம் பிரதிகளாக சித்த வைத்தியரான எனது பேரனாரிடம் இருந்து கிடைக்கப்பெற்றது. இதனை கற்று புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அண்மையில் ஏற்பட அனுதினமும் என் அகத்தில் வீற்றிருந்து வழி நடாத்தும் அகஸ்திய மகரிஷி அருளாசியோடு இதன் பொருளை விளங்க முற்படுகிறேன். சிறுவயதிலிருந்து அகஸ்திய மகரிஷியை குலதெய்வமாக வழிபடும் பேறுபெற்றதனால், அவரருளால் அவரது பரம்பரையில் யோகவித்தை கற்ற சித்த புருஷர் மூலம் சித்த வித்தைகளுக்கான தீட்சை பெற்று அதன் வழி சாதனை புரிகின்றதன் பயனாக விளங்கிய சில விடயங்களை சித்த வித்தை கற்க ஆர்வம் உள்ளவர்களுக்காக "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற நோக்கில் வெளியிடுகிறோம். இதில் பொருட் பிழையிருப்பின் எனது புரிதலில் உள்ள பிழை, சரியிருப்பின் அது எல்லாம் வல்ல அகஸ்திய மகரிஷியின் வாக்கு எனக்கொள்க.

இந்த நூலில் உள்ள உரை நடை எமது குருபரம்பரையில் அகஸ்திய மகரிஷியிடமே நேர்முகமாய் பன்னிரெண்டு வருடங்கள் பொதிகை மலை, நீலகிரி மலையில் சூஷ்ம ஆசிரமத்தில் நேர்முகமாய் கற்று தன் குரு நாதரின் ஆணைக்கிணங்க  தான் கற்பித்த வித்தைகளுக்களை நிரூபணமாய் பூவுலகில் 108 வருடங்கள் வாழ்ந்த உன்னத யோகி டாக்டர். பண்டிட். ஜீ. கண்ணைய யோகியாரது அணுகுமுறையில் எழுதப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் இதில் கூறப்பட்ட முறையினை செய்து பலன் பெறும் பயிற்சி முறைகளும் விளங்கப்படுத்தப்பட்டிருக்கும்.

சித்த வித்யா விளக்கவுரை

அதுவென்ன சித்த வித்யா விளக்கவுரை? சாதரணமாக பாடல்கள் எதுகையும் மோனையும் கூடி யாப்பிலக்கணத்திற்கமைய எழுதப்பட்டிருக்கும், அதற்கு நல்ல தமிழறிஞர் விளக்கவுரை கூறுவார். இது எப்படியெனில் பல்கலைக்கழகத்தில் இரசாயனயவியல் பாடத்தினை விரிவுரையாளர் குறிப்பு (NOகூஉகு) வாசிப்பது போன்றது. இதனை நன்கு மனப்பாடமாக்கி சித்தி பெற்றுக்கொண்டாலும், கல்வியினை முடித்து இரசாயனவியலாளராக (இடஞுட்டிண்t) தொழில் செய்ய முடியாதலால், ஆய்வு கூடத்திற்கு சென்று அமிலங்களையும், இரசாயனங்களையும் கலந்து பெறும் அனுபவ அறிவே வாழ்க்கையில் தொழிலில் முன்னேற்ற செய்யும் என்பது போல், சித்தர் பாடல்களை படித்தும் எதுகை மோனை கூடி வாய்ப்பேச்சுக்கும் பயன் படுத்தாமல், அனுபவ பயிற்சிக்கு பயன்படுத்தும் அணுகு முறையே சித்த வித்யா விளக்கவுரை. இது ஒருவகை குறிவிலக்கம் (ஈஉஇOஈஐNஎ). சித்தர் பரம்பரையில் தொடர்புகொண்டதினால் வந்த அனுபவத்தில் குரு ஆணைக்கிணங்க இதில் தகுந்தவர்கள் பலன் பெறுவதற்காக வெளியிடுகிறோம்.

இந்தப்பாடல் தொகுப்பு மொத்தம் முப்பது பாடல்களை கொண்டுள்ளது, தற்போது சில சித்தர்பாடல் தொகுப்புகளில் வந்துள்ளதாகவும் தெரிகின்றது. எனினுன் இங்கு எடுத்தாளப்படும் செய்யுள் தொகுப்பு எமது தனிப்பட்ட பாரம்பரிய சேகரிப்பில் உள்ளபடியானதாகும். மேலும் இங்கு பொருள் கூறப்படும் முறையானது மனதினை எகாக்கிரப்படுத்தி இந்த நூலினை இயற்றிய ஆசிரியர் எந்த மனநிலையில் இந்தனை கூறமுற்பட்டாரோ அந்த நிலையில் இருந்து பொருள் எழுதும் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தினம் ஒரு பாடல் வீதம் முப்பது நாட்களுக்கு முப்பது பாடல்கள் என்று எழுதி முடிப்பதாக உத்தேசித்து குருவின் அருள் வேண்டி பிரார்த்திக்கிறோம்.

நன்றி: சுமனன் – சித்த வித்யா விஞ்ஞானம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !