கோயில்களில் பொங்கல் சிறப்பு வழிபாடுகள்
ADDED :4322 days ago
பரமக்குடி: பரமக்குடி பகுதியில் உள்ள பெரும்பாலான கோயில்களில் பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடைபெற்றது. சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் காலை 6 மணிக்கு திருப்பள்ளிஎழுச்சி, திருப்பாவை பாடப்பட்டன. தரைப்பாலம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகமும், பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மகாவிஷ்ணு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கல்பட்டறை விநாயகர் வெள்ளிக் கவசத்தில் அருள்பாலித்தார். எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு தீபாராதனையும், நயினார்கோவில் நாகநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும், தரைப்பாலம் தர்மசாஸ்தா கோயில், ஐந்து முனை ரோடு அருகில் உள்ள ஐயப்பன் கோயிலில் மகரஜோதி மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.