ஆலயத்திருவிழா துவக்கம்
ADDED :4322 days ago
வால்பாறை: வால்பாறை டவுன் மத்தியப்பகுதியில் அமைந்துள்ள ஆர்.சி.,சர்ச் தேர்த்திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கொடியை கோவை மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ் ஏற்றினார். ஒவ்வொரு நாளும் காலை, மாலை திருப்பலியும், பாடற்பலியும் நடக்கிறது. வரும் 18ம் தேதி மாலை 6.00 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை ஜோசப்செல்வராஜ் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.