உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் தைப்பூசம்- ஆறாம்நாள்!

பழநியில் தைப்பூசம்- ஆறாம்நாள்!

பழநியில் முருகன் சிவ அம்சத்துடன் அபிஷேகப்பிரியராக வீற்றிருக்கிறார். இங்கு பகலில் நடை சாத்தப்படுவதில்லை. பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருநீறு போன்றவற்றால், இவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் நோய் நீங்கி, ஆரோக்கியம் உண்டாகும். இவர் மொட்டையாண்டியாக சித்தரிக்கப்பட்டாலும், சடைமுடியுடன் இருப்பதை "முடிமிசை யொண்மீக் குடுமியழகும் தண்டும் சேரவோர் என பழநி தலபுராணம் கூறுகிறது. ஆதியில் போகர் என்னும் சித்தராலும், பின்பு அவருடைய சீடர் புலிப்பாணி முனிவராலும் வழிபாடு செய்யப்பட்ட இவருக்கு, திருப்பணி செய்து கோயில் கட்டிய மன்னர்கள் சேரர்கள். அதன் காரணமாக, இன்றும் கேரளமக்கள் இக்கோயிலுக்கு அதிக அளவில் வந்து வழிபடுகின்றனர். சபரிமலை ஐயப்பனைத் தரிசித்து வரும் பக்தர்களும், பழநி தண்டாயுதபாணியை தரிசித்த பின்னரே யாத்திரை முழுமையடைவதாக நம்புகின்றனர். இன்று காலை 9.00 மணிக்கு தந்தப் பல்லக்கிலும், இரவு 8.30 மணிக்கு வெள்ளி ரதத்திலும் முத்துக்குமார சுவாமி பவனி வருகிறார். மாலை 6.30மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !