உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொதுமக்கள் ஒன்று கூடி வைத்த சமத்துவ பொங்கல்!

பொதுமக்கள் ஒன்று கூடி வைத்த சமத்துவ பொங்கல்!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி உடுமலை ரோடு அண்ணா நகரில், பொதுமக்களால் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. சின்னாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பொதுமக்கள் இணைந்து, அப்பகுதியில் சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர். எவ்வித சமூக ஏற்ற தாழ்வுகளும் இல்லாமல், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் இணைந்து, பாரம்பரிய முறையில் பொங்கலிட்டனர். அப்பகுதி பெண்கள் இணைந்து, புதுப்பானையை அலங்கரித்து, வைத்த பொங்கலை சூரிய பகவானுக்கு படைத்தனர். பின், அவ்வழியே பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பொங்கலை வழங்கி மகிழ்ந்தனர். இவ்வாண்டில் ஆரம்பமாகியுள்ள இவ்விரா, இனி தொடர்ந்து கொண்டாடப்படும் என்று பொதுமக்கள் கூறினர். ஊராட்சி தலைவர் பானுமதி, கவுன்சில் ஹக்கீம் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !