உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிராம பூசாரிகளுக்கு பொங்கல் போனஸ்

கிராம பூசாரிகளுக்கு பொங்கல் போனஸ்

வால்பாறை: கிராம பூசாரிகளுக்கு பொங்கல் போனஸ் வழங்க கூட்டத்தில் வலியுறுத்தினர். வால்பாறையில் கிராமக்கோவில் பூசாரிகள் பேரவை கூட்டம் மாவட்ட அமைப்பாளர் ஜெகன்னாதன் தலைமையில் நடந்தது. ஒன்றிய அமைப்பாளர் பிச்சை வரவேற்றார். நலவாரிய அமைப்பாளர் மாணிக்கம், இணை அமைப்பாளர் ராஜன் பங்கேற்றனர். கிராம கோவில் பூசாரிகளுக்கு தமிழக அரசு பொங்கல்போனஸ் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறுபவர்கள், அவர்களின் மறைவுக்கு பின் அவர்களுடைய மனைவிக்கு தியம் வழங்க வேண்டும். பூசாரிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். கிராம கோவில்களின் ஒரு கால பூஜை செய்யும் பூசாரிகளுக்கு மாதசம்பளம் வழங்க வேண்டும். பூசாரிகள் நல வாரிய உறுப்பினர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பூசாரி ஆதிமூலம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !