பாதூர் பெருமாள் கோவிலில் மார்கழி மாத உற்சவம் நிறைவு
ADDED :4394 days ago
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் மார்கழி மாத மகோற்சவ நிறைவு விழா நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் மார்கழி மஹோற்சவ நிறைவு விழாவையொட்டி ஸ்ரீஆண்டாள் நாச்சியார் சுவாமி திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளி திருக்கன்னுபிடி வைத்து நான்கு மாடவீதி வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீஆண்டாள் நாச்சியார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 6 மணிக்கு விஸ்ப ரூப தரிசனமும், 7 மணிக்கு திருவோதரனையும், 10 மணிக்கு சுவாமி திருவீதியுலாவும் நடந்தது. இரவு 8 மணிக்கு சிறப்பு விழபாடு நடந்தது. இதற் கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் விஜயராகவஐயர், சம்பத் ஐயர் ஆகியோர் செய்திருந்தனர்.