ஐயப்ப சுவாமிக்கு மகரசங்கராந்தி விழா
ADDED :4325 days ago
விழுப்புரம்: காணை செல்வ விநாயகர் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு மகரசங்கராந்தி கற்பூர தீபஜோதி தரிசன விழா நடந்தது. விழாவையொட்டி அதிகாலை 5:00 மணிக்கு அய்யப்ப சுவாமிக்கு இள நீர், நெய், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வா சனை திரவியங்க ளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் னர் 11:00 மணிக்கு சுவாமி அலங்கார விமானத்தில் திருவீதியுலா, கற்பூர ஜோதி தரிசனம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அகில பாரத அய்யப்பா சேவா சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.