உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஹரசங்கராந்தியில் கோசாலையில் பூஜை

மஹரசங்கராந்தியில் கோசாலையில் பூஜை

ஈரோடு: ஈரோடு அடுத்த, 46புதூர் லட்சுமிநாராயண கோசாலை உள்ளது. இங்கு, 30 பல்வேறு வகையான பசுக்கள், 15 கன்றுகள், ஒரு காங்கேயம் காளை, மூன்று குதிரை போன்றவை வளர்க்கப்படுகிறது. நேற்று மஹர சங்கராந்தியை முன்னிட்டு, பசுக்கள், கன்றுகள், காளை, குதிரை போன்றவைகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக, அங்குள்ள கிருஷ்ணர் சிலைக்கு சிறப்பு பூஜை நடந்தது. கோசாலையில் உள்ள பசுக்கள், குதிரைகளுக்கு, பொங்கல் ஊட்டப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை கோசாலை நிறுவனர் சுயம்பிரகாசம் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !