மாதேஸ்வரன் கோவிலில் மாட்டுப் பொங்கல் விழா
ADDED :4324 days ago
சத்தியமங்கலம்: நடுமலை மாதேஸ்வரன் கோவிலில் நேற்று மாட்டுப் பொங்கல் விழா நடைபெற்றது. கோவிலில் நந்தீஸ்வரர், நந்தி சிலைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கால்நடைகள் நோயின்றி நீண்ட நாள் வாழவும் விவசாயம் செழிக்கவும் விவசாயிகள் இங்கு மண் உருவ பொம்மைகளை காணிக்கையாக செலுத்தி செலுத்தி வழிபட்டனர்.